ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

ரூ.1 லட்சத்து 16 ஆயிரம் சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் தடய அறிவியல் துறையில் நிரப்பப்பட உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஜூலை 24க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 64

பணி: Junior Scientific Officer
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Chemistry - 40
2. Biology - 14
3. Physics - 06
4. Physics and Chemistry (Division:Computer Forensic Science) - 04

சம்பளம்: மாதம் ரூ.36,900 -1,16,600

வயதுவரம்பு: 0 1.07.2019 அடிப்படையில் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தடய அறிவிய்ல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. விண்ணப்பக் கட்டணம் ரூ.100. ஒரு முறை பதிவிக் கட்டணம் செலுத்தி பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2019

No comments:

Post a Comment