1050 இடங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் பயிற்சிக்கு 392 பேர் விண்ணப்பம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

1050 இடங்கள் உள்ள நிலையில் ஆசிரியர் பயிற்சிக்கு 392 பேர் விண்ணப்பம்

ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என சட்டம் கொண்டு வந்ததால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது.  இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு 392 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வது தற்போது வெகுவாக குறைந்துள்ளது.


 கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களில், அரசுப்  பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புவோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது


. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்து வருகிறது.

இந்த தேர்வில் பெரும்பாலானவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை.


 தேர்ச்சி பெறும் குறைந்த அளவு நபர்களுக்கும் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணிகள் இல்லை. அதனால் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் பலர், வேலை இல்லாமல் தவித்து  வருகின்றனர். இதனால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.


 இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் ெசால்லிக்கொள்ளும் வகையில் இல்லை. அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,  பள்ளிகளில் மொத்தம் 1850 இடங்கள்தான் உள்ளன.


அவற்றுக்கான கவுன்சலிங் தொடங்க உள்ள நிலையில், கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி 1850 இடங்களுக்கு வெறும் 392  பேர்தான் விண்ணப்பித்துள்ளனர்.


 இதில் பிளஸ்2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். அதில் பொதுப் பிரிவு மாணவர்கள் 50 சதவீதம், இதர பிரிவினர் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட  ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1050 இடங்கள் உள்ளன. 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்குதான் வெறும் 392 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.


 தனியார் பள்ளிகளிலும் அதேபோல குறைந்த அளவே விண்ணப்பித்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment