ரூ.17,000 ஊதியத்தில் தனிப்பட்ட உதவியாளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 20, 2019

ரூ.17,000 ஊதியத்தில் தனிப்பட்ட உதவியாளர் வேலை

மத்திய அரசின் மசகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்டில் (Mazagon Dock Shipbuilders Limited) காலியாக உள்ள தனிப்பட்ட உதவியாளர் (Personal Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

தனிப்பட்ட உதவியாளர் (Personal Assistant) பிரிவில் 20 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

ஏதாவது ஒரு துறையில் இளநிலை பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 17,000 முதல் ரூ. 64,360 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.mazagondock.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://mazagondock.in/writereaddata/career/Advt_No_88_652019120858PM.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-06-2019

No comments:

Post a Comment