கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆசிரியர்களை பணியமர்த்தும்போதே, ஓய்வூதியத் திட்டத்தை பற்றி தெளிவாகக் கூறி தான் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆசிரியர்களை பணியமர்த்தும்போதே, ஓய்வூதியத் திட்டத்தை பற்றி தெளிவாகக் கூறி தான் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அடுத்த மூன்று மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 'பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை இந்தியாவில் வேறெந்த மாநிலத்தில் இல்லாத அளவிற்கு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களில், கடந்த ஆண்டு படிப்பு முடித்து சென்றவர்களுக்கும் மடிக்கணினி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்தபோது 37 லட்சம் மடிக்கணினிகளை வாங்கினார்கள்.


 தற்போதைய அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 21 லட்சத்து 20 ஆயிரம் மடிக்கணினிகள் வாங்கப்பட்டு, அவை நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

2017-18 கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கும், அடுத்த மூன்று மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.

 பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரைக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது.

 புதிய திட்டங்கள் குறித்து வரும் 2 -ஆம் தேதி சட்டமன்றத்தில் அறிவிக்கும்போது தெரிந்து கொள்ளலாம்.

கடந்த 2004 -ஆம் ஆண்டு ஆசிரியர்களை பணியமர்த்தும்போதே, ஓய்வூதியத் திட்டத்தை பற்றி தெளிவாகக் கூறி தான் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள்" என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment