மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மருத்துவமுறை படிப்புகளுக்கு நீட் தேர்வு மதிபெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடும் சோதனை மற்றும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 20-ம் தேதி நடைபெற்றது.
நடப்பு ஆணடுக்கான மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தகுதி தேர்வை இந்தியா முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 14 நகரங்களில் 188 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 1.40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
நீட் தேர்வுகள் முடிவுகள் கடந்த 5-ம் தேதி தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக டெல்லியில் 74.92 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட 9.01% மாணவ, மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, கடந்தாண்டு தமிழகம் முழுவதும் 22 மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2,900 இடங்கள் இருந்த நிலையில் தற்போது இந்தாண்டு புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரியுடன் கூடுதலாக 250 இடங்கள் ஒதுக்கப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் 150 இடங்களுடன் கூடிய புதிய மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதை தவிர திருநெல்வேலி மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 95 இடங்களுக்கான அனுமதி இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளது.
பெரம்பலூர், ஊட்டி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மருத்துவக் கல்லூரிக்கான பரிந்துரை அனுமதி கிடைக்காமல் இன்னும் நிலுவையில் உள்ளன.
இதுமட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் அரசுக்கு உள்ளன.
இந்நிலையில், மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும் 5 ஆண்டுகளிலும் தலா 25% உயர்த்திக் கொள்ளலாம் என்றும் பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10% இந்த ஆண்டே ஒதுக்கவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது

No comments:
Post a Comment