பிளஸ்2 தமிழ் பாடத்திட்டத்தில் காவி நிற தலைப்பாகையுடன் பாரதியார் போல் வரையப்பட்ட படம் இடம்பெற்றுள்ளது.
இது தமிழக கல்வித்துறை காவி மயமாகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி (நேற்று முன்தினம்) பள்ளிகள் திறக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வினியோகிக்கப்பட்டது.
அதில் பிளஸ்2 தமிழ் புத்தகத்தில் தலைப்பாகையுடன் பாரதியாரின் முறுக்கிய மீசை போல் வரையப்பட்ட படம் ஒன்று இடம் பெற்றிருந்தது. பாரதியார் என்றாலே அனைவருக்கும் வெள்ளை நிற தலைப்பாகையும், முறுக்கிய மீசையும், கோபமான பார்வையும் நினைவுக்கு வரும்.
ஆனால் பிளஸ்2 தமிழ் பாடப்புத்தகத்தில் பாரதியார் போல் வரையப்பட்ட படம் காவி தலைப்பாகையுடன் இருப்பது, தமிழக கல்வித்துறையை காவிமயமாக்கல் முயற்சியா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதியிடம் கல்வித்துறையை காவிமயமாக்க முயற்சியா என்று கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது:
கல்வித்துறையை காவிமயமாக்கல் என்பதை திட்டவட்டமாக மறுக்கிறேன்.
இது மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புத்தகம். முழுக்க முழுக்க கல்விக்காக உருவாக்கப்பட்ட புத்தகத்தில் அரசியல், மதத்துக்கு எந்த இடமும் இல்லை. புத்தகத்தில் தவறு இருக்கும்பட்சத்தில் அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் வளர்மதி கூறினார்.

No comments:
Post a Comment