3 தேர்வுகளின் முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

3 தேர்வுகளின் முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

உதவி ஜெயிலர் உள்பட, மூன்று தேர்வுகளுக்கான முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

 டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், உதவி சிறை அலுவலர் பதவியில், 30 காலியிடங்களுக்கு, ஜன., 6ல் தேர்வு நடத்தியது. இதில், 8,305 பேர் பங்கேற்றனர்.

 இதில், 80 பேர் நேர்காணலுக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு வரும், 25ம் தேதி நேர்காணல் நடக்க உள்ளது.

இந்து சமய அறநிலைய துறை செயல் அலுவலர் நிலை - 3 பதவியில், 105 காலியிடங்களுக்கு, பிப்., 16ல் தேர்வு நடந்தது. 46 ஆயிரம் பேர் பங்கேற்றதில், 108 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 அவர்களுக்கு வரும், 27ம் தேதி முதல், ஜூலை, 5 வரை சான்றிதழ்களை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது புவியியலாளர் பணியில், 15 காலியிடங்களுக்கு, மே, 5ல் நடந்த தேர்வில், 516 பேர் பங்கேற்றனர்.

 அவர்களில், 39 பேருக்கு, வரும், 27ம் தேதி முதல், ஜூலை, 5 வரை சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, அவகாசம் வழங்கப் பட்டுள்ளது

No comments:

Post a Comment