இந்தியாவில் முழுமையாக 4ஜி சேவையை மட்டும் வழங்கும் நெட்வொர்க்காக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சந்தையை இழந்து வரும் நிலையில், 3ஜி சேவையை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் நம்பர் 1 தொலைத்தொடர்பு நிறுவனமாக இருந்த ஏர்டெல் இன்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டும் வருவாயும் குறைந்துகொண்டே வருகிறது.
எனவே செலவுகளை குறைப்பதற்காக 3ஜி சேவையை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு திருப்பும் பணிகளில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை முதல் ஏர்டெல் 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது.
வரும் காலங்களில் இது பிற நகரங்களுக்கும் நடைமுறைக்கு வரலாம். 3ஜி சேவை நிறுத்தப்பட்டாலும் 2ஜி சேவை தொடர்ந்து கிடைக்கும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெரும்பாலானவர்கள், தற்போது வரை ஃபீயூச்சர் போன்களையே பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் 4ஜி-க்கு மாற்றுவது எளிதல்ல.

No comments:
Post a Comment