சவுத் இந்தியன் வங்கியில் 42 ஆயிரம் சம்பளத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

சவுத் இந்தியன் வங்கியில் 42 ஆயிரம் சம்பளத்தில் வேலை

சவுத் இந்தியன் வங்கியில் புரொபிசனரி அதிகாரி, புரொபிசனரி கிளர்க் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிகள்:
1. புரொபிசனரி அதிகாரி
2. புரொபிசனரி கிளர்க்

காலிப்பணியிடங்கள்:
1. புரொபிசனரி அதிகாரி - 160
2. புரொபிசனரி கிளர்க் - 385
மொத்தம் = 545 காலிப்பணியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2019
புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 25.07.2019
புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வு நடைபெறும் தேதி: 26.07.2019

ஊதியம்:
1. புரொபிசனரி அதிகாரி என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.23,700 முதல் அதிகபட்சமாக ரூ.42,020 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

2 .புரொபிசனரி கிளர்க் என்ற பணிக்கு, குறைந்தபட்சமாக ரூ.11,765 முதல் அதிகபட்சமாக ரூ.31,540 வரை மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்:
1. புரொபிசனரி அதிகாரி பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.800, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.200
2. புரொபிசனரி கிளர்க் பணிக்கான தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் - ரூ.600, எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் - ரூ.150

வயது வரம்பு:
புரொபிசனரி அதிகாரி பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 25 ஆகவும், புரொபிசனரி கிளர்க் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆகவும் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பில் பயின்று, குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.southindianbank.com/Careers/careerslist.aspx - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

தேர்வு செய்யும் முறை:
1. எழுத்துத் தேர்வு,
2. குழு கலந்துரையாடல்,
3. நேர்முக தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

மேலும், இது குறித்த தகவல்களுக்கு, https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Clerk_Notification_June_2019.pdf & https://www.southindianbank.com/UserFiles/file/Probationary_Officer_Notification_June_2019.pdf - என்ற இணையதள முகவரிக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment