சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்திருக்கும் 50 பேர் - வெளியாகிறது விபரம்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 50 இந்தியர்களின் விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியா அரசுடன் பகிர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் , சுவிஸ் வங்கிகளில் இருந்து தகவலை பெற கடும் முயற்சிகளை மேற்கொண்டது. அதன் விளைவாக இரு நாடுகளும் சில ஒப்பந்தங்களை மேற்கொண்டன. அதன் அடிப்படையில்சில முக்கிய தகவல்கள், பணம் வைத்திருப்போர் விவரங்களை அந்நாட்டு அரசு இந்தியாவோடு பகிர்ந்திருந்தது. இதன்அடுத்தக்கட்டமாக மேலும் சிலரின் விவரங்களை இந்தியாவோடு பகிர சுவிஸ் அரசு முன்வந்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் விவரங்களை வழங்க வேண்டும் என அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது

இந்த நிலையில் 50 இந்தியர்களின் விவரங்களை பகிர்வதற்கான பணிகளை சுவிட்சர்லாந்து அரசு முன்னெடுத்துள்ளது. ரியல் எஸ்டேட், நகை வியாபாரம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களே இதில் அடங்குவர். இது தொடர்பாக விளக்கமளிக்க அந்த 50 இந்தியர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள 100 இந்தியர்களின் பட்டியலை ஏற்கனவே அந்நாட்டு அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment