தமிழகம் முழுவதும் 55 அரசு கலைக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி: நிரப்ப நடவடிக்கை எடுக்குமா அரசு? மூத்த பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 22, 2019

தமிழகம் முழுவதும் 55 அரசு கலைக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி: நிரப்ப நடவடிக்கை எடுக்குமா அரசு? மூத்த பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழகம் முழுவதும் அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள 55 முதல்வர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என மூத்த பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் 99 அரசு கலைக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.


 நடப்பாண்டில், 14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளையும் அரசே ஏற்றதையடுத்து, மொத்தம் 113 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படித்து வருகின்றனர்


.கடந்த சில ஆண்டுகளாக இன்ஜினியரிங் படிப்புகள் மீதான மோகம் குறைந்ததால்,கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை இருமடங்காக அதிகரித்து வருகிறது.

இதனால்,பல கல்லூரிகளில் சுழற்சி அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படுகிறது.


 இந்நிலையில் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால்,மாநிலம் முழுவதும் 55 கலைக்கல்லூரிகளில்,முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என மூத்த பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:


 தமிழக அரசு கலைக்கல்லூரிகள் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கிரேடு 1 மற்றும் கிரேடு 2 கல்லூரி என பிரிக்கப்பட்டுள்ளது.


 மாநிலம் முழுவதும் ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், கடந்த மாதம் பலர் ஓய்வுபெற்றனர். இதனால், காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55ஐ எட்டியுள்ளது.

 அக்கல்லூரிகளில்,பேராசிரியர்களே தற்போது பொறுப்பு முதல்வர்களாக செயல்பட்டு வருகின்றனர். எனவே,அனைத்து கல்லூரிகளுக்கும் உடனடியாக முதல்வர்களை நியமிக்க வேண்டும்.

உயர்கல்வித்துறையை பொறுத்தவரை,கல்லூரி கல்வி இயக்குநர்,4 இணை இயக்குநர் மற்றும் 50க்கும் அதிகமான முதல்வர் பணியிடங்கள் ஒட்டுமொத்தமாக காலியாக இருப்பது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.


 ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல்வர் பதவிக்கான பேனல் பெறப்பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டில், தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் 308 பேர் உதவி பேராசிரியர்களாக பணியில் சேர்ந்தனர்.


 அவர்களில், ஓய்வுபெற்றவர்கள்,இறந்தவர்கள்,மாற்றுப்பணிக்கு சென்றவர்களை தவிர, தற்போது 270 பேரை வரை முதல்வர் பதவிக்கான முன்னுரிமை பட்டியலில் உள்ளனர். ஆனால்,பதவி உயர்வு வழங்காமல் அரசு,தாமதப்படுத்தப்படுகிறது.


இதனால்,58 வயதை நெருங்கும் பேராசிரியர்கள்,முதல்வர் பதவியை பெறாமலேயே ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேராசிரியராக இருந்து கிரேடு 2 முதல்வராக பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, எந்தவித ஊதிய உயர்வும், சலுகையும் இல்லை. அவர்கள்,கிரேடு 2ல் இருந்து கிரேடு 1 முதல்வராக பதவி பெற்றால் மட்டுமே கூடுதல் ஊதியமும்,பிற சலுகையும் கிடைக்கும்.


மேலும், ஓய்வுபெறும் போது கூடுதல் பணப்பயன் பெறலாம். இதனால் காலியாகும் கிரேடு 2 பணியிடத்திற்கு மூத்த பேராசிரியர்களை புதிதாக முதல்வர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment