தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை

சமூக வலைதளங்களில் அவதூறு பேச்சுக்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 258 பேர் கொல்லப்பட்டனர்.


500 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து இலங்கையில் டுவிட்டர், பேஸ்புக், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்த 9 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.


இந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் போலியான தகவல் பரவுவதை தடுக்க புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது


.இந்த புதிய சட்டத்தின் படி, சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்புவோருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1 மில்லியன் (5715 அமெரிக்க டாலர்) அபராதமாக விதிக்கும் சட்டம் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது

சட்டத்துறை அமைச்சர் கொண்டு வந்த இந்த புதிய சட்டத்திற்கு இலங்கை அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போதும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலின் போதும் சமூக வலைதளங்களில் பல தவறான தகவல்கள் பரவியதால் இணையதள சேவை முடக்கப்பட்டது.

 தற்போது மீண்டும் தவறான தகவல்கள் பரவுவதால் அதற்கு நிரந்தர தீர்வு காண இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment