விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை ஒரு லிட்டர் ரூ.600; என்ன ஸ்பெஷல் தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை ஒரு லிட்டர் ரூ.600; என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நா ள் முழுக்க டெஸ்ட் போட்டிகளில் விளையாடினாலும், கொஞ்சமும் ஸ்டேமினா குறையாமல் களத்தில் நிற்பவர் விராட் கோலி. தன் உடல்மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில் அவருக்கு எப்போதுமே தனி கவனம் உண்டு. உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டு, எல்லோரையுமே ஆச்சர்யப்படுத்துவார். மற்ற இந்திய அல்லது உலக கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிடுகையில், இவரது உடற்தகுதி மேலோங்கிக் காணப்படுகிறது என்பதைப் பல உடற்தகுதி நிபுணர்களும் தெரிவித்திருக்கிறார்கள். ஆரோக்கியமான டயட் என்பதை உணவுகளில் மட்டுமன்றி, தான் குடிக்கும் நீரிலும் பின்பற்றுகிறார் விராட் கோலி.

இவர் குடிக்கும் தண்ணீர் பிரான்ஸிலிருந்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?

பொதுவாக நீரை ஃபில்ட்டர் செய்யும்போது அதில் இருக்கும் மினரல் சத்துகள் வடிகட்டப்படுகின்றன. இதனால் முழுமையான மினரல் சத்துகள் நமக்கு நீரில் இருந்து கிடைக்காமல் போகிறது. ஆனால், எவியன் மினரல் வாட்டர் மிகுதியான மினரல் சத்துகள் இயற்கையான முறையில் ஃபில்ட்டர் செய்யப்பட்டு கிடைக்கிறது. அதனால்தான் இதன் விலையும் கூடுதலாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் எவியன் குடிநீர் அடைக்கப்படும் பாட்டில்களும் பிரத்தியேகமானவை மற்றும் விலையுயர்ந்தவை என்பதாலும் விலை அதிகமாக இருக்கிறது. ஸ்பெஷல் எடிசன் ஸ்மார்ட்போன்களைப்போல, ஸ்பெஷல் எடிசன் வாட்டர் பாட்டில்களிலும் எவியன் நிறுவனம் குடிநீரை விற்பனை செய்கிறது. இந்த பாட்டில்களை உலகின் மிகப் பிரபலமான ஃபேஷன் டிசைனர்களில் ஒருவரான டயான் வொன் ஃப்ருஸ்டன்பெர்க் வடிவமைத்திருக்கிறார்.

பனிகள் படர்ந்த மலைகளில் உற்பத்தியாகும் நீர், இயற்கையான முறையில் ஃபில்ட்டர் ஆகி கிடைக்கிறது. அதைத்தான் எவியன் நிறுவனம் குடிநீராக வர்த்தகப்படுத்துகிறார்கள். பிரான்ஸ் மெடிக்கல் அகாடமி 1878-ம் ஆண்டிலேயே இந்த நீரின் தரத்தைப் பரிசோதித்துத் தரச்சான்றிதழை வழங்கியிருக்கிறது. ஒரு லிட்டர் தண்ணீரில் நடுநிலையான சமச்சீர் pH - 7.2, கால்சியல் - 80 மி.கிராம், குளோரைடு - 10 மி.கிராம், மக்னீசியம் - 26 மி.கிராம், பொட்டாசியம் - 1 மி.கிராம், சோடியம் - 6.5 மி.கிராம் ஆகியவை இயற்கையாகவே இருக்கின்றன.

விராட் கோலி குடிப்பதால் மட்டுமல்ல, இதிலுள்ள இயற்கை குணநலன்கள் அதிகம் இருப்பதால் விளையாட்டு வீரர்களுக்கும் தடகள வீரர்களுக்கும் உடல்நல ஆலோசனையாளர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

No comments:

Post a Comment