Aadhaar Card-IRCTC Account Link: ஐ.ஆர்.சி.டி.சி.யோட ஆதாரை இணைங்க:கூடுதலாக 6 டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

Aadhaar Card-IRCTC Account Link: ஐ.ஆர்.சி.டி.சி.யோட ஆதாரை இணைங்க:கூடுதலாக 6 டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம்

ஐ..ஆர்.சி.டி.சி. உடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொண்டால், கூடுதலாக 6 டிக்கெட்டை பதிவு செய்துகொள்ளலாம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தான் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே, ஐ.ஆர்.சி.டி,சி. இணையதளத்தின் மூலம் எளிதாக ரயில் டிக்கெட் புக் செய்துவிடுவர்.


 ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் மாதம் ஒன்றிற்கு 6 டிக்கெட்கள் மட்டுமே புக் செய்ய அனுமதி அளித்து வருகிறது


. இதனால், குறைவான நபர்களோடு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள முடிந்தது. இந்த குறையை போக்கும் விதத்தில், ஐ.ஆர்,சி.டி,சி. ஒ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.


 ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துடன் ஆதார் எண்ணை இணைத்தால், 12 டிக்கெட்கள் வரை புக் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி அனுமதி அளித்துள்ளது

How to link aadhaar with irctc account :


 ஐ.ஆர்.சி.டி.சி உடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது


ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திற்குள் செல்லவும்


யூசர்நேம், பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்யவும்


மை அக்கவுண்ட் பகுதியில், Link Your Aadhaar பிரிவை தேர்ந்தெடுக்கவும்


ஆதார் எண் அல்லது விர்சுவல் ஐடியை அதில் பதிவிடவும்.


Send OTP பட்டனை அழுத்தவும்
ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒன்டைம் பாஸ்வேர்டு வரும்.


அந்த ஒன்டைம் பாஸ்வேர்டை பதிவிட்டு Verify OTP பட்டனை அழுத்தவும்.


பின் ஆதார் சரிபார்ப்பு நடவடிக்கைகக்காக அப்டேட் பட்டனை அழுத்தவும்.


ஆதார் சரிபார்ப்பு நிறைவடைந்தது என்ற பகுதி வந்தவுடன், மீண்டும் ஐஆர்சிடிசி அக்கவுண்டை லாகின் செய்து 12 டிக்கெட்கள் வரை புக் செய்து, சுற்றுலாவை நண்பர்களுடன் இனிமையாக கழிக்கலாம்.

No comments:

Post a Comment