முன்னாள் மாணவர்கள் முயற்சியால் கலர்புல்லாக புதுப்பொலிவு பெறும் அரசு பள்ளி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

முன்னாள் மாணவர்கள் முயற்சியால் கலர்புல்லாக புதுப்பொலிவு பெறும் அரசு பள்ளி

திருவள்ளூர் அடுத்த பட்டறைபெரும்புதூர் கிராமத்தில் 1959ம் ஆண்டு முதல் அரசு பள்ளி இயங்கி வருகிறது


. தற்போது இங்கு 6 முதல் 10ம் வகுப்பு  வரையில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வருடந்தோறும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.


 இதனால் கடந்த 1995ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்  ஆசிரியர் கழக தலைவர் ஜெயலட்சுமி மணிமனோகரன் தலைமையில், மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என முடிவு செய்து  முதற்கட்டமாக, பள்ளி கட்டிடத்தை சுத்தம் செய்து, மாணவர்களை கவரும் வண்ணம் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்கொடையாளர்கள் மூலம், பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள், மின் விளக்குகள், குடிநீர்  வசதிகளையும் ஏற்படுத்தி தர உள்ளனர்.


மேலும் கிராமத்தில் உள்ள பெற்றோரை நேரில்சந்தித்து, இப்பள்ளியிலேயே தங்களது பிள்ளைகளை சேர்க்கவும் முயற்சித்து வருகின்றனர்

No comments:

Post a Comment