இலவச 'லேப்டாப்' அரசு புதிய முடிவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

இலவச 'லேப்டாப்' அரசு புதிய முடிவு

நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 1 பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கே இலவச 'லேப்டாப்' வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது


.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் இலவசமாக 'லேப்டாப்' என்ற மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன


.இதில் 2017 - 18ம் ஆண்டு பிளஸ் 2 படித்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு 2018 - 19ம் கல்வி ஆண்டில் வழங்கப்படும் என அரசு அறிவித்தது


.அதன்படி 2017 - 18ல் பிளஸ் 2 முடித்தவர்கள்; 2018 - 19ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பவர்கள் என மூன்று பிரிவினருக்கும் சேர்த்து ஒரே நேரத்தில் லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.


 இதற்காக 'எல்காட்' நிறுவனம் வழியாக 15.53 லட்சம் லேப்டாப்கள் கொள்முதல் செய்யப்பட்டன.இந்நிலையில் லேப்டாப் வழங்கும் முடிவில் அரசு மாற்றம் செய்துள்ளது.

அதன்படி நடப்பு கல்வியாண்டான 2019 - 2020ல் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து முதலில் லேப்டாப் வழங்கப்படும்.

அதன்பிறகே ஏற்கனவே படித்து முடித்தவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் லேப்டாப் கிடைக்கும் என பிளஸ் 2 முடித்து இரு ஆண்டுகளாக காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment