இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'தமிழ்வாழ்க'ஹேஷ்டேக் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

இந்திய அளவில் முதலிடம் பிடித்த 'தமிழ்வாழ்க'ஹேஷ்டேக்

மக்களவையில் தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க முழக்கமிட்டு பதவி பிரமாணம் செய்ததால், இந்திய அளவில் தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.


நேற்று முதல் மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்று வருகின்றனர்.  தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிகள் இன்று பதவியேற்றனர்.


 மக்களவையின் தற்காலிக சபாநாயகர் வீரேந்திரக் குமார் எம்.பி.களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக எம்.பிக்கள் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.


 தயாநிதி மாறன்  “வாழ்க தமிழ்“, “வாழ்க கலைஞர்“, “வாழ்க பெரியார்“ என்ற முழக்கத்துடன் பதவியேற்று கொண்டனர். கனிமொழி  “வாழ்க தமிழ்“, “வாழ்க பெரியார்என்று பதவியேற்றார்.

அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினரும், தேனி தொகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார், எம்ஜிஆர், ஜெயலலிதா வாழ்க என்றும், வந்தே மாதரம்,  ஜெய்ஹிந்த் என்றும் முழக்கமிட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், வாழ்க அம்பேத்கர், பெரியாரியம்.. வளர்க ஜனநாயக சமத்துவம்” என்றார். இந்நிலையில், தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்

No comments:

Post a Comment