வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: ஆர்.பி.ஐ., அதிரடி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு ஜாக்பாட்: ஆர்.பி.ஐ., அதிரடி அறிவிப்பு

வங்கி கணக்கு வைத்திருப்பாேர், என்.இ.எப்.டி., மற்றும் ஆர்.டி.ஜி.எஸ்., முறையில், மற்றொரு வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் போது, வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து, வங்கிகள் பிடிக்கும் பரிவர்த்தனை கட்டணத்தை ரத்து செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கி கணக்கு வைத்திருப்போர், வேறொரு வங்கி கணக்கிற்கோ அல்லது அதே வங்கியை சேர்ந்த வேறொரு கிளையில் உள்ள வங்கி கணக்கிற்கோ அல்லது வேறொருவரின் வங்கி கணக்கிற்கோ பணம் செலுத்த, என்.இ.எப்.டி., அல்லது ஆர்.டி.ஜி.எஸ்., முறையை பயன்படுத்துவது வழக்கம்.

வங்கிகள் அளிக்கும் இந்த சேவைக்கு, பரிவர்த்தனை கட்டணமாக குறிப்பிட்ட தொகை, வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்டர்நெட் பேங்கிங் முறையை பிரபலப்படுத்தவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், வங்கிகள் பிடிக்கும் இந்த தொகையை ரத்து செய்ய, ஆர்.பி.ஐ., எனப்படும், இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், ஏ.டி.எம்., இயந்திர பயன்பாட்டிற்காக பிடித்தம் செய்யப்படும் தொகையை மாற்றி அமைப்பது குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஆர்.பி.ஐ., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment