காஞ்சிபுரத்தில் பள்ளிகளின் வேலை நேரம் குறைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 23, 2019

காஞ்சிபுரத்தில் பள்ளிகளின் வேலை நேரம் குறைப்பு

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவையொட்டி, அங்கு பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிவிப்பில், "காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறவுள்ள அத்திவரதர் விழாவை காண, தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.


இந்த விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மட்டும் 48 நாட்களுக்கு பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட உள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் பள்ளிகள், ஜூலை 1 - ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை, காலை 8.30 மணி முதல் மதியம் 1.30 வரை செயல்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment