புதிய தலைமைச் செயலாளர் யார்?: ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

புதிய தலைமைச் செயலாளர் யார்?: ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கோப்புகள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இதனிடையே, தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நிதித் துறை செயலாளராக க.சண்முகம் பொறுப்பு வகித்து வருகிறார்.


 அதற்கு முன்பாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளராகவும், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களின் ஆட்சியராகவும் பொறுப்பு வகித்தார்திமுக ஆட்சியைத் தொடர்ந்து, அதிமுக ஆட்சியிலும் கடந்த எட்டு ஆண்டுகளாக நிதித் துறை செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.


 வண்ணத் தொலைக்காட்சி பெட்டித் திட்டம், அம்மா உணவகம் என திமுக, அதிமுக உள்ளிட்ட இரு அரசுகளிலும் மக்களவைக் கவரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியவர்.


அரசுத் துறைகளில் மிகுந்த அனுபவங்களைப் பெற்ற அவர், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


ஆளுநர் ஒப்புதல்:


புதிய தலைமைச் செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான கோப்புகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


புதிய தலைமைச் செயலாளர் தேர்வுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தபிறகு, அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனிடையே, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக உள்ள க.சண்முகம் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படும் பட்சத்தில், முதல்வரின் செயலாளராகவும் (நிலை 3), பொதுத் துறை முதன்மைச் செயலாளராகவும் (முழு கூடுதல் பொறுப்பு) உள்ள செந்தில்குமார் நிதித் துறை செயலாளர் பொறுப்பை ஏற்கக் கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment