விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் ! ஆய்வில் தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகளே எதிர்காலத்தில் கெத்தாக இருப்பார்கள் ! ஆய்வில் தகவல்

சிறுவயதில்  விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் பிற்காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சோர்வடையாமல் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

இன்றைய கால இளைஞர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு சோர்வடைந்து விடுகின்றனர். சின்ன தோல்விகளை கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. எளிதில் மனதளவில் உடைந்து விடுகின்றனர். தோல்வியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு அடுத்த அடியை எடுத்து வைத்தால் வெற்றி நிச்சயம் என்பதை இளைஞர்கள் புரிய வேண்டும்.

இந்நிலையில் சிறுவயதில்  விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் பிற்காலத்தில் சின்ன சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சோர்வடையாமல் வாழ்க்கையை சுமூகமாக நடத்துவதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 1997 மற்றும் 1998 காலங்களில் பிறந்து தற்போது 20 வயதில் இருக்கும் பெரியவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் 6 முதல் 10 வயதில் நன்றாக உடல் விளையாட்டில் ஈடுபட்ட குழந்தைகள் மன தைரியத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் உடல் விளையாட்டில் ஈடுபடாமல் இருந்த குழந்தைகள் சற்று கூச்சத்தன்மையுடன், அதிக பயம் கொண்டவராகவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment