காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 24, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻🕴🕴🕴🕴🕴🕴🕴
*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
2⃣5⃣-0⃣6⃣-1⃣9⃣

*இன்றைய திருக்குறள்*

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
 ஒல்லாது வானம் பெயல்.

*மு.வ உரை:*
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.

*கருணாநிதி  உரை:*
முறை தவறிச் செயல்படும் ஆட்சியில் நீரைத்தேக்கிப் பயனளிக்கும் இடங்கள் பாழ்பட்டுப் போகுமாதலால், வான் வழங்கும் மழையைத் தேக்கி வைத்து வளம் பெறவும் இயலாது.

*சாலமன் பாப்பையா உரை:*
ஆட்சியாளர் நீதி தவறினால் நாட்டில் பருவகாலமும் தவறி மழையும் பெய்யாது போகும்.
✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நம்பிக்கை நிறைந்த ஒருவர், யார் முன்னேயும், எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Daily Used Words*

 Snake, Serpent பாம்பு

 Sow, Female Hog பெண் பன்றி

 Spider சிலந்தி

 Tiger புலி

 Tigress பெண்புலி

🍀☘🌿🎋☘🍀🌿

*இன்றைய மூலிகை*

*தூது வளை*

நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வளை நல்லது.

✍✍✍✍✍✍✍

1.இந்தியா மயிலை தேசியப்பறவையாக அறிவித்த ஆண்டு எது ?

*1964*

2. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது ?

*ஈசல்*

3. நின்றபடியே தூங்கும் பிராணி எது ?

*குதிரை*

4. இந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருள் எது?

*அரிசி*

5. வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?

*ஆறுகள்*

✒✒✒✒✒✒✒

*நூலாசிரியர் - நூல்கள்*

திருக்குறள் –    திருவள்ளுவர்

நாண்மணிக்கடிகை –    விளம்பிநாகனார்

இனியவைநாற்பது –    புதஞ்சேந்தனார்

திரிகடுகம் –    நல்லாதனார்

ஆசாரக்கோவை –    பெருவாயின் முள்ளியார்

பழமொழி நானுாறு –    முன்றுறையரையனார்

சிறுபஞ்சமூலம் –    காரியாசான்

முதுமொழிக் காஞ்சி –    கூடலுார் கிழார்

ஏலாதி –    கணிமேதாவியார்

திணைமாலை நுாற்றைம்பது –    கணிமேதாவியார்

இன்னிலை –    பொய்கையார்
🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

*Possessive Pronouns – ஆறாம் வேற்றுமை* (உரிமையைக் குறிக்கும்)
 இவை உரிமையைக் குறிக்க அல்லது உரிமையை வெளிப்படுத்தப் பயன்படுபவை. இவற்றை சுட்டுப்பெயராக பயன்படுபவைகள் பெயரெச்சமாக பயன்படுபவைகள் என இரண்டு விதமாகப் பார்க்கலாம்.

mine - என்னுடையது
yours - உன்னுடையது
his - அவனுடையது
hers - அவளுடையது
its - அதனுடையது
ours - எங்களுடையது
yours - உங்களுடையது
theirs – அவர்களுடையது, அவைகளுடையது

உதாரணம்:

This house is ours.
இந்த வீடு எங்களுடையது

Adjective – பெயரெச்சம்

பெயரெச்சமாகப் பயன்படுபவைகள்

my – என்னுடைய
your – உன்னுடைய
his – அவனுடைய
her - அவளுடைய
its - அதனுடைய
our – எங்களுடைய
your – உங்களுடைய
their - அவர்களுடைய, அவைகளுடைய

உதாரணம்:

This is our house.
இது எங்களுடைய வீடு.

வேறுப்பாடு (Possessive - Adjective)

This is our house. (Adjective)
இது எங்களுடைய வீடு.

This house is ours. (Possessive)
இந்த வீடு எங்களுடையது.

📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

எழுத்து | eluthu
முதலெழுத்து

‘அ’– முதல்‘ஔ’  வரையுள்ள உயிரெழுத்துகள் 12-ம் , ‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள மெய்யெழுத்துகள் 18 – ம் ஆன 30 எழுத்துகளும் , முதலெழுத்துகளாகும் . இந்த 30 எழுத்துகளும் சேர்ந்து , 216 உயிர்மெய் எழுத்துகள் உருவாக காரணமாக இருப்பதால் , இவை முதலெழுத்துகள் என்றழைக்கப்படுகின்றன .
அ’ முதல் ‘ஔ’ வரையுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துகளும்
‘க்’ முதல் ‘ன்’ வரையுள்ள பதினெட்டு மெய்யெழுத்துகளும்

ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும்.

மொழிக்கு உயிர் போன்றவை உயிரெழுத்துகள். உடல் போன்றவை மெய்யெழுத்துகள். இவை 216 உயிர் மெய்யெழுத்துகள் தோன்ற அடிப்படையாய் உள்ளன. இவ்வாறு மொழிக்கு முதற்காரணமாய விளங்குவதால் இவை முதலெழுத்துகள் என்று வழங்கப்படுகின்றன.

🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*தைரியம்*

 ஜென் துறவி ஒருவர் மடாலயத்தில் தங்கி இருந்தார். அவரிடம் இருக்கும் சீடர்களில் ஒருவன் மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவன். இருட்டைப் பார்த்தாலே அந்த சீடன் பயப்படுவான். அந்த மடத்தில் இருக்கும் ஜென் துறவியானவர் இரவில் படுக்கும் முன்பு எப்போதும் தன் சீடர்களுடன் பேசி விட்டு பிறகு தான் தூங்கச் செல்வார். அதேப்போல் ஒரு நாள் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில்இ சீடர்கள் துறவியிடம் கதை சொல்லுமாறு கேட்டனர். அவரும் கதைச் சொல்ல ஆரம்பித்தார். அதிலும் அவர் சொல்லும் கதை தைரியமற்று இருக்கும் அந்த சீடனுக்கு தைரியத்தை வரவழைக்குமாறு இருந்தது.

 அந்த கதை என்னவெனில் ஒரு ஊரில் மன்னன் ஒருவன் தினமும் சூரிய உதயத்தை பார்த்து எழுவதை தன் வழக்கமாக கொண்டிருந்தார். அதேபோல் ஒரு நாள் மன்னர் காலையில் சூரிய உதயத்தைகாண கண் விழித்தார். ஆனால் அவர் கண்ணை திறக்கும் நேரத்தில் பிச்சைக்காரன் ஒருவன் அவர் கண்ணில் தென்பட்டான். அதனால் வெறுப்புடன் திரும்பிய போது மன்னர் சுவற்றில் மோதிக் கொண்டு அதனால் அவர் தலையில் இரத்தம் வழிந்தது. ஆகவே கோபம் கொண்ட அந்த மன்னர் பிச்சைக்காரனை பிடித்து வருமாறு காவலர்களிடம் சொன்னார். அவர்களும் பிச்சைக்காரனை பிடித்து வந்தனர்.

 மன்னரோ அவனை தூக்கிலிடுமாறு தண்டனை கொடுத்தார். ஆனால் அந்த பிச்சைக்காரன் சிரித்துக் கொண்டு நின்றான். அதைப் பார்த்த மன்னர் அவனிடம் அட பைத்தியமே! ஏன் சிரிக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு அந்த பிச்சைக்காரன் என்னைப் பார்த்ததால் உங்களுக்கு தலையில் மட்டும் தான் இரத்தம் வந்தது. ஆனால் உங்களை நான் பார்த்ததால் எனக்கு தலையே போகப் போகிறது என்பதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். உடனே அந்த மன்னர் தன் தவறை உணர்ந்து தண்டனையை ரத்து செய்தார் என்று சொல்லிக் கதையை முடித்தார். மேலும் இக்கதையின் மூலம் தைரியம் இல்லையென்றால் தம் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போகும் என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றார் ஜென் துறவி. பிறகு அந்த சீடன்இ அன்று முதல் எதற்கும் பயப்படாமல் தைரியத்துடன் காணப்பட்டான்.

🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮 இந்திய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா ராஜினாமா

🔮ஜூலை 31-ஆம் தேதி வரை தமிழக சட்டமன்றத்தை நடத்த முடிவு.

🔮கணினி ஆசிரியர் தேர்வில் சர்வர் கோளாறு சகஜம்தான், ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்.

🔮 ஆதார் எண்ணை கட்டாயமாக அடையாளச் சான்று உடன் இணைக்க வேண்டும் . திருத்த மசோதா தாக்கல், கட்சிகள் எதிர்ப்பு.

🔮 ஜப்பானில் நடைபெற்ற மகளிர் F.I.H.சீரியஸ் ஹாக்கி தொடரில் இந்தியா தங்கப்பதக்கம் பெற்று உள்ளது.

🌿🍀☘🎋🌿🍀☘

*தொகுப்பு*
T. தென்னரசு,
இ.ஆசிரியர்,
TN டிஜிட்டல்  டீம்,
இரா.கி.பேட்டை ஒன்றியம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9600423857.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment