ஏசி, இன்டர்நெட், ஸ்மார்ட் வகுப்பறையுடன் அதிநவீன அரசு பள்ளி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

ஏசி, இன்டர்நெட், ஸ்மார்ட் வகுப்பறையுடன் அதிநவீன அரசு பள்ளி

திருவண்ணாமலை அருகே ரூ.27 லட்சம் செலவில் ஏசி, இன்டர்நெட், ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் அமைக்கப்பட்ட அரசு பள்ளியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.


 திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூர் ஊராட்சி ஒன்றிய ெதாடக்க பள்ளியை அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரி பள்ளியாக மாற்ற கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முடிவு செய்தார்.


 இதற்கான பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று நிறைவுபெற்றது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, பள்ளியை திறந்து வைத்தார்.


 இப்பள்ளிக்கு நேற்று வந்த மாணவ, மாணவிகள் தங்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்

இதுகுறித்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு அரசு பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக மாற்ற இப்பள்ளியை தேர்வு செய்தோம். அதன்படி ரூ27 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து வசதிகளும் கொண்டதாக இப்பள்ளி மாற்றப்பட்டுள்ளது.


 இப்பள்ளியில் 30 மாணவர்கள் மட்டுமே படித்து வந்த நிலையில், தற்போது கூடுதலாக 23 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


 புரொஜக்டர், டிவி, இணையதளம், குளிர்சாதன வசதி, இருக்கைகள், அலமாரிகள், அறிவியல் விளையாட்டு உபகரணங்கள் உள்பட அனைத்து வசதிகள் கொண்ட ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் உள்ள டிவியில் குழந்தைகளுக்கு பிடித்த அறிவியல் சார்ந்த குறும்படம் ஒளிபரப்பப்படும். தொலைவில் இருந்து வரும் மாணவர்களுக்கு வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.


 இப்பள்ளியில் மாணவர்கள் வருகை பதிவேடு பயோ மெட்ரிக் முறையில் செயல்பட உள்ளது. உணவு உண்ணும் இடம், காலணிகள் வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.


 மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தனியாக கழிவறை வசதி, மாணவர்களுக்கு நவீன கழிவறை வசதி, மாணவர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா வசதி செய்யப்பட்டுள்ளது.


 இதேபோல் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் மேலும் 18 பள்ளிகள் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment