வேலைவாய்ப்பு முகாமில் போலிகள் அரசு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 22, 2019

வேலைவாய்ப்பு முகாமில் போலிகள் அரசு அதிகாரிகள் பகிரங்க எச்சரிக்கை




தனியார் வேலைவாய்ப்பு முகாம் முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. போலிகள் குறித்து ஏமாற வேண்டாம் என, வேலைவாய்ப்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இலவசமாக தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், படிக்காதவர்கள் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ முதல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., படித்தவர்கள் வரை பல்வேறு அலுவலக பணிகளுக்கும், தொழிற்கல்வி கற்றவர்களுக்கு தொழிற்சாலைகளிலும் பணி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இதில், பல்வேறு தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்று, வேலை தேடி வருவோரை சந்தித்து நேர்காணல் நடத்தி, கல்வித்தகுதி, சம்பளம், முன் அனுபவம் அடிப்படையில் தேர்வு செய்து, உடனடியாக பணி நியமனத்துக்கான உத்தரவை வழங்குகின்றனர்.இதில், வேலை தேடுவோர் மற்றும் வேலை அளிப்போர் யாருக்கும், எதற்கும், கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.ஆனால், வெளியூரில் வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தும் சிலர், வேலை தேடும் நபர்களிடம், கோவையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, பணம் பெற்றுக் கொண்டு, ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளன.

இது குறித்து, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர்ஜோதிமணி கூறுகையில்,''இம்முகாமில், ஆட்கள் தேவைப்படும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரடியாக பங்கேற்க வைக்கிறோம். அதே போல வேலை தேவைப்படும் நபர்களையும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறோம். தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. இம்முகாமில் பங்கேற்க பணத்தை பெற்று மோசடி செய்வதாக புகார் வந்தால், உரிய நிறுவனம் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment