பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வானவர்கள் போராட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வானவர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை வழங்கக் கோரி சிறப்பு பாடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கான ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு ஆயிரத்து 80 பேர் கொண்ட தகுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதனிடையே தகுதியிருந்தும் தங்களது பெயர்கள் தகுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை எனக் கூறி, தமிழ்வழியில் தேர்வெழுதியவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தகுதிப்பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கும் இதுவரை பணிநியமன ஆணைகள் வழங்கப்படவில்லை.

இதனைக் கண்டித்தும், உடனடியாக தங்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்க வேண்டும் எனவும் கோரி, தேர்வில் வெற்றி பெற்று தகுதிப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment