சரியாக செயல்படாத அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அறிவுரை
இது தொடர்பாக டில்லி வட்டாரங்கள் கூறுகையில், 1972, மத்திய சிவில் சேவை (பென்சன்) சட்டம், அடிப்படை விதி 56(j)யின் கீழ் , கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டியவர்களை கண்டறியும் பணியை துரிதப்படுத்தும்படி, அனைத்து துறை தலைவர்களையும், கேபினட் செயலகம் மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையம் வாய்மொழியாக அறிவுறுத்தியுள்ளது.
பொது மக்கள் நலன் கருதி, அரசு அலுவலர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் விதி 56(j) பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால், குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
தடை இந்த விதியின்படி, 50 அல்லது 55 வயதை தாண்டியவர்கள் அல்லது பணியில் 30 ஆண்டுகளை நிறைவு செய்தவர்களை, அவர்களின் திறன் அடிப்படையில், கட்டாய ஓய்வில் அனுப்ப முடியும்
2014 ல் பிரதமராக மோடி பதவியேற்றதும், உடனடியாக இந்த விதியை பயன்படுத்த மத்திய அரசு முயற்சி செய்தது. பல தடைகள் காரணமாக இந்த நடவடிக்கை வேகம் பெறவில்லை.
ஆனால், பதவிக்காலத்திற்கு முன்னர், சரியாக செயல்படாத 230 அதிகாரிகளை மட்டுமே கட்டாய ஓய்வில் அனுப்ப முடிந்தது.
ஆனால், தற்போது, இந்த எண்ணிக்கை சில ஆயிரங்களை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவு அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்பும் விதியின்படி , இந்த முறை, சரியாக செயல்படாத ஐஏஎஸ், ஐபிஎஸ், குரூப் 'ஏ', குரூப் 'பி' பிரிவு அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டாய ஒய்வு அளிக்கும் முடிவை செயல்படுத்தும்படி, அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
உதாரணம்:
சமீபத்தில், சரியாக செயல்படவில்லை எனக்கூறி, ஐஏஎஸ் அதிகாரிகளான எம்என் விஜயகுமார், கே.நரசிம்மா மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளான மயங்க் ஷீல் சோகன், ராஜ்குமார் தேவங்கன் ஆகியோர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment