காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்

🕴🕴🕴🕴🕴🕴🕴🕴🕴👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻👩‍💻
 *காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*

*இன்றைய திருக்குறள்*

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
 எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

*மு.வ உரை*
நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தருவதாகும்.

*கருணாநிதி  உரை*
நடுவுநிலையாளனின் செல்வத்திற்கு அழிவில்லை; அது, வழிவழித் தலைமுறையினர்க்கும் பயன் அளிப்பதாகும்.

*சாலமன் பாப்பையா உரை*
நீதியை உடையவனின் செல்வம் அழியாமல் அவன் வழியினர்க்குப் பாதுகாப்பாக இருக்கும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்

 _சுவாமி விவேகானந்தர்

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important  Words*

 Sea-dog  கடல் நாய்

 Sea-horse  கடற்குதிரை

 Shark  சுறா மீன்

 Sheep  செம்மறியாடு

 Snail  நத்தை

🍀🌿☘🍀🌿☘🍀🌿🎋

*இன்றைய மூலிகை*

*கரிசலாங்கண்ணி*

 இக்கீரை முதுமைத்தோற்றத்தைக்கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. இரைப்பையை வலுப்படுத்துவதில் சிறந்தது.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது?

*நிக்கல்*

2. எந்தப் பறைவைக்கு சிறகு இல்லை ?

*கிவி*

3.தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?

*ராஜ்பவன்*

4. கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ?

*ஆர்த்ரோ போடா*

✒✒✒✒✒✒✒✒

*தொடரும் தொடர்பும்*

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” – பாரதியார்.

தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லுடா – நாமக்கல் கவிஞர்.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” – நாமக்கல்கவிஞர்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” – நாமக்கல் கவிஞர்.

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல, மாதவம் செய்திட வேண்டும்மா – கவிமணி தேசீகவிநாயகம் பிள்ளை.

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

*Today's grammar*

Indefinite Pronouns : ஒரு நபரையோ ஒரு பொருளையோ குறிப்பிட்டு கூறாமல் நிச்சயமற்ற நிலையில் பேசுவதற்கு இச் சுட்டுப்பெயர்கள் பயன்படுகின்றன.

all – எல்லா, முழு
another - இன்னொன்று, இன்னொருவர்
every - எல்லா
any – ஏதாவது ஒன்று
some – சில, கொஞ்சம்
nothing – ஒன்றும் இல்லை (ஒன்றும் இல்லாத நிலை)
several – பல
each – ஒவ்வொரு
many – பலர், பல
few - சில

உதாரணம்:

Each of the members has one vote.

📫📫📫📫📫📫📫📫📫

*அறிவோம் இலக்கணம்*

*இடுகுறிப் பொதுப்பெயர்*

மலை என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுப்பெயர்.
காடு என்பது அனைத்துவகைக் காடுகளுக்கும் பொதுப்பெயர்.
மாடு என்பது பல்வகை மாடுகளுக்கும் பொதுப்பெயர்.
இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப்பெயர்களை இடுகுறிப்பொதுப் பெயர் எனக் கூறுவர்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*புதிர் கதை*

தோட்டாக்கள்
 ஒரு காட்டிலே மூன்று பேர் வேட்டையாடிக் கொண்டிருந்தனர். ஒரு ஓடையைத் தாண்டும்போது இரண்டு பேரின் தோட்டாக்கள் ஓடையில் விழுந்து நனைந்து விட்டது. ஆதலால் மூன்றாம் நபர் தன்னிடம் இருந்த தோட்டாக்களை மூவருக்குமாக சமமாக பிரித்தார். ஒவ்வொருவரும் நான்கு முறை சுட்டபிறகு மீதம் இருந்த மொத்த தோட்டாக்களின் எண்ணிக்கை சுடுவதற்கு முன்னர் அவர்களிடம் இருந்த தோட்டாக்களின் எண்ணிக்கைக்கு சமம். முதலில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் எத்தனை தோட்டாக்கள் இருந்தன?

*விடை*

18 தோட்டாக்கள்.

🧾🧾🧾🧾🧾🧾🧾🧾🧾

*செய்திச் சுருக்கம்*

🔮மங்களூருவில் ஓடுபாதையில் இருந்து நழுவிய விமானம் ,183 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

🔮 உலகில் ஏழு மலை சிகரங்களை சென்றடையும் முயற்சியில் சாதனை படைத்தார், கர்நாடகாவைச் சேர்ந்த அபர்ணா குமார் என்ற இந்திய வீராங்கனை.

🔮 அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெறும் சர்வதேச மணல் சிற்ப சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.

🔮 ரஷ்யாவிடமிருந்து இந்தியா ரூ.200 கோடிக்கு நவீன டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

🔮உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது

🌿🍀☘🌿🍀☘🎋🌿🍀

*தொகுப்பு*

T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

No comments:

Post a Comment