பணியிடங்களை முழுமையாக நிரப்பாத ஆசிரியர் கல்லூரிகளில் சேர்க்கை நிராகரிக்கப்படும்: பல்கலைக்கழகம் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

பணியிடங்களை முழுமையாக நிரப்பாத ஆசிரியர் கல்லூரிகளில் சேர்க்கை நிராகரிக்கப்படும்: பல்கலைக்கழகம் எச்சரிக்கை

பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பாத ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.



தமிழகத்தில் உள்ள 500-க்கும் அதிகமான ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில், 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் போதிய அளவில் தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.


இதற்கிடையே தரமான ஆசிரியர்களை உருவாக்கும் வகையில், ஆசிரியர் கல்லூரிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


அதன் அடிப்படையில், அனைத்து கல்லூரிகளும் 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக உரிய எண்ணிக்கையில் தகுதி வாய்ந்த பேராசிரியர்களை நியமிக்கவேண்டும் என அறிவுறுத்தி சுற்றறிக்கை ஒன்றை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளதுஅதில் கூறியிருப்பதாவது:-


என்.சி.டி.இ. 2014 ஆம் ஆண்டில் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி, உளவியல், தத்துவம், தொழில்நுட்பத் துறைகளின் கீழ் பி.எட். படிப்பை வழங்கும் 100 சேர்க்கை இடங்களைக் கொண்ட கல்லூரிகளில் 4 பேராசிரியர்களையும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப் பாடம் ஆகிய துறைகளின் கீழ் பி.எட். வழங்கும் கல்லூரிகள் 8 பேராசிரியர்களையும் நியமித்திருக்க வேண்டும்.


 மேலும், இந்தக் கல்லூரிகள் தகுதி வாய்ந்த முதல்வர் பணியிடத்தையும் நிரப்பியிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
எனவே, 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, இந்த எண்ணிக்கையில் பேராசிரியர் பணியிடங்களை கல்லூரிகள் நிரப்பியிருக்க வேண்டும்.


அவ்வாறு பணியிடங்களை நிரப்பாமல் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கை தகுதியற்ற சேர்க்கையாக அறிவிக்கப்படுவதோடு, அந்தச் சேர்க்கையும் ரத்து செய்யப்படும் என பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது

No comments:

Post a Comment