கணினி பயிற்றுநர் தேர்வு: விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

கணினி பயிற்றுநர் தேர்வு: விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்யலாம்

கணினி பயிற்றுநர் தேர்வு எழுதியவர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் விடைத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2018-2019 ஆம் ஆண்டுக்கான கணினி பயிற்றுநர் (நிலை-1) (முதுகலை ஆசிரியர் நிலை) நேரடி நியமனத்துக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 1-ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது


.
இதற்காக கணினி வழித் தேர்வு கடந்த ஜூன் 23, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.


 இந்தத் தேர்வை எழுதியவர்கள் வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தங்களது user id மற்றும் password-ஐ பயன்படுத்தி www.trb.tn.nic.in எனும் இணையதளத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

1 comment:

  1. தயவு செய்து இதற்கு மறுப்பு எக்ஸாம் மறுதேர்வு வைக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுககொள்கிறேன்

    ReplyDelete