பெற்றோரை இழந்து கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் தவித்த ஈரோடு மாணவி:முதல்வர் உதவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 26, 2019

பெற்றோரை இழந்து கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் தவித்த ஈரோடு மாணவி:முதல்வர் உதவி

பெற்றோரை இழந்து கல்லூரி படிப்பை தொடரமுடியாமல் தவித்த ஈரோடு மாவட்ட மாணவி சிவரஞ்சனிக்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் மீண்டும் அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பகுதியில் உள்ள காளிதிம்பம் கிராமத்தை சேர்ந்த ஏழை பழங்குடியின மாணவி சிவரஞ்சனி ஆவர். இவரின் தாய் மாரம்மாள், சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 சிவரஞ்சனி கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த நிலையில் தந்தை  சாமிநாதனும், உடல் நலக்குறைவால் இறந்ததால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பினார்.

இதனால், சிவரஞ்சனியும், சகோதரர் ஹரி பிரசாந்த்தும் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்பு சிவரஞ்சனி அங்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து தனது சகோதரன் ஹரிபிரசாத் படிப்புக்கு உதவி செய்து வந்தார்.


 இதுகுறித்து செய்தி வெளியானதை தொடர்ந்து, மாணவியின் நிலையை அறிந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இருவரின் படிப்புச்செலவை அரசே ஏற்கும் என கடந்த அக்டோபரில் உத்தரவிட்ட நிலையில் சகோதரனும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


இதையடுத்து சிவரஞ்சனி கோவை அரசு கல்லூரியில் விடுதியில் தங்கி படிப்பை தொடர பழங்குடியினர் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

No comments:

Post a Comment