மெரினா கடற்கரையோரம் விற்பனை செய்யப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம்..: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 27, 2019

மெரினா கடற்கரையோரம் விற்பனை செய்யப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம்..: சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள்

மெரினா கடற்கரையோரம் விற்பனை செய்யப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலைகிறார்கள்.


 தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.


 இவ்வாறான சூழல் நிலவும் நிலையில் மெரினா கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் தண்ணீருக்காக எந்த மாதிரியான கஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள் என்பதை எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இயற்கை அவர்களை கைவிடவில்லை.

பொதுவாக கடல் நீர் தன்மையாக இருந்தாலும் கடற்கரையோரம் பூமிக்கு அடியில் இருக்கும் தண்ணீர் நன்னீராகவே இருக்கும்.


 மேலும் கடற்கரையோம் 15 அடி ஆழம் வரை நல்ல தண்ணீர் இருக்கும். அதற்கு மேல் உப்பு தண்ணீர் தான் கிடைக்கும். இதன் காரணமாக மெரினா கடற்கரையில் சுமார் 6 இடங்களில் போர்வெல் அமைத்து கை பம்புகள் வைக்கப்பட்டுள்ளது


. இந்த போர்வெல் தண்ணீர் தான் நொச்சி குப்பம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதி குடிசைவாசிகள் குடிநீராக இப்போது உள்ளது.


 அப்பகுதி மக்கள் அனைவரும், இந்த தண்ணீரை வரிசையில் நின்று குடங்களில் பிடித்து ஆட்டோக்களில் ஏற்றி வீடுகளுக்கு கொண்டு செல்கிறார்கள்.


 உப்பில்லாத இந்த தண்ணீரை அவர்கள் குடிக்க, குளிக்க மற்றும் துணி துவைக்க பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில் மெரினா கடற்கரையோரம் கிடைக்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


 இதுகுறித்து பேசிய சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிகரன், மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல்களில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் வாரியத்தின் பரிசோதனை கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது.


 அந்த தண்ணீர் குடிநீராக பயன்படுத்த ஏற்றதல்ல என்பது தெரியவந்தது. அதில் குடிநீருக்கான திடப்பொருள் குறைவாக உள்ளது


. ஆனால் அந்த தண்ணீரை குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். குடிநீருக்காக பயன்படுத்தப்படும் குழாய்களில் விநியோகம் செய்யப்படுகிறது.


 மெரினாவில் போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment