கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நாளை முதல் 17ம்தேதி வரை நடைபெற உள்ளது. அதனையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் எஸ்பி சரவணன் ஆகியோர் நேற்று கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் கூறுகையில்,இந்த முகாமில் வேலூர், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்
. இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு, தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன.
முகாமில் மருத்துவ பரிசோதனை, உடற்தகுதி, எழுத்துத்தேர்வு யாவும் வெளிப்படையாகவும், நம்பகத்தன்மையுடன் நடைபெறும்.
எனவே இத்தேர்விற்காக இடைத்தரகர்களை யாரும் அணுக வேண்டாம். இம்முகாமில் கடலூர் மாவட்ட இளைஞர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்
கடலூரில் நடைபெறும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளது.
தேர்வில் பங்கேற்பவர்கள் விளையாட்டு அரங்கினுள் நுழையும்போதே அவர்களது விரல் ரேகை பயோ மெட்ரிக் மூலம் பதிவு செய்யப்படும்.
அவர் தேர்ச்சி பெறாத பட்சத்தில் விளையாட்டு அரங்கை விட்டு வெளியே செல்லும்போதும் அவரது விரல்ரேகை பதிவு செய்யப்படும். கடலூரில் நடைபெறும் இந்த தேர்வில் தான் முதன்முறையாக இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment