பள்ளியில் திடீர் ஆய்வு: மாணவர்களுடன் இரவு தூங்கிய கலெக்டர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 29, 2019

பள்ளியில் திடீர் ஆய்வு: மாணவர்களுடன் இரவு தூங்கிய கலெக்டர்

சித்தூர் அருகே அரசு உண்டு, உறைவிட பள்ளியில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் நாராயண பரத்குப்தா மாணவர்களுடன் இரவு தங்கினார்.ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் 13 மாவட்ட கலெக்டர்களுடன் மாநாடு நடத்தினார்.


இந்த மாநாட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கண்டெடுத்து இடிக்க வேண்டும், கலெக்டர்கள் வாரம் ஒருமுறை அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, உண்டு, உறைவிட பள்ளிகளில் இரவு தூங்கி மாணவர்களின் கஷ்டங்களை அறிய வேண்டும் என்றார்.

இந்நிலையில் சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத்குப்தா நேற்று முன்தினம் இரவு பெனுமூர் மண்டலத்தில் உள்ள எஸ்சி மாணவர்களுக்கான அரசு உண்டு, உறைவிட பள்ளிக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.


 அப்போது மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிவறை போன்றவை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து  மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை பெற்று அவர்களுடன் ஒன்றாக உணவு சாப்பிட்டார்.


தொடர்ந்து இரவு மாணவர்கள் தூங்கிய அறையிலேயே கலெக்டர் நாராயண பரத் குப்தா உட்பட அதிகாரிகள் படுத்து தூங்கினர். பின்னர் காலையில் அனைவரும் எழுந்து அங்கிருந்து புறப்பட்டனர்

No comments:

Post a Comment