வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமா..? ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க வேண்டுமா..? ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி

வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் 'புகார் மேலாண்மை அமைப்பு' (சி.எம்.எஸ்.) என்ற புதிய சாப்ட்வேர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்காக 'புகார் மேலாண்மை அமைப்பு' (சி.எம்.எஸ்.) என்ற புதிய சாப்ட்வேர் செயலியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தொடங்கி வைத்தார்.
அப்போது சக்திகாந்த தாஸ் பேசுகையில், இந்த செயலியின் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.வங்கிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக மாற்றவும், அவர்களது குறைகளை தீர்க்கும் பணியை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த செயலி மூலம் புகார் தெரிவித்தவுடன் தானாகவே ஒப்புதல் தகவல் கிடைக்கும். தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட நிலை குறித்த தகவலும் அதில் வெளியிடப்படும். தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் அதில் வசதி செய்யப்பட்டு இருப்பதாகவும், புகார்களின் நிலையை அறிய ஒரு பிரத்யேக குரல் பதிவு முறையை (ஐவிஆர்) முறையை அறிமுகப்படுத்தவும், புகார் விண்ணப்பம் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment