நீட் தேர்வுக்கு எதிரான மனு: இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, June 28, 2019

நீட் தேர்வுக்கு எதிரான மனு: இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தவறான மதிப்பெண்ணை வெளியிட்டதால் 2019-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இது தொடர்பாக பதிலளிக்குமாறு இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் மையம் ஆகியவற்றுக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வரும் ஜூலை 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.


நீட் தேர்வு எழுதிய மாணவி ஜஸ்கீரத் கெளர் என்ற மாணவி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


 அதில், நீட் தேர்வுக்குப் பிறகு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட விடைக் குறிப்புடன் ஒப்பிடும்போது எனது மதிப்பெண் 400-க்கு மேல் வருகிறது.

ஆனால், தேர்வில் எனக்கு 334 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதனால், என்னால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை.


எனவே, கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவை ரத்து செய்துவிட்டு, எனது சரியான மதிப்பெண்ணுடன் கூடிய புதிய தேர்வு முடிவை வெளியிட வேண்டும்.


 ஏனெனில், எனது எதிர்காலமே இந்த தேர்வு முடிவில்தான் அடங்கியுள்ளது. அதில் தவறு நேர்ந்துள்ளது வெளிப்படையாகவே தெரியவந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.


இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோதி சிங், இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் மையம் ஆகியவை இது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment