இட ஒதுக்கீடு இலவச சேர்க்கை பள்ளிகளில் இன்று குலுக்கல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, June 5, 2019

இட ஒதுக்கீடு இலவச சேர்க்கை பள்ளிகளில் இன்று குலுக்கல்

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டை விட அதிகளவு விண்ணப்பம் பெற்ற பள்ளிகளில், இன்று குலுக்கல் முறையில் மாணவர்கள் சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில், இணையம் மூலம், சிறுபான்மையற்ற, தனியார் சுயநிதிப்பள்ளிகளில், 25 சதவீத இட ஒதுக்கீட்டில், நுழைவுநிலை வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஏப்., 22 முதல் மே 18 வரை பெறப்பட்டன.

 விண்ணப்பித்த குழந்தைகள் பட்டியல், கடந்த மாதம் 30ல் பதிவிறக்கம் செய்யப்பட்டது.

இட ஒதுக்கீடு எண்ணிக்கையை விட, குறைவான அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், தகுதியான குழந்தைகளுக்கு சேர்க்கை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையினர் கூறியதாவது:


இட ஒதுக்கீட்டை விட அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருந்தால், தகுதியான விண்ணப்பங்களுக்கு, 6ம் தேதி (இன்று) அந்தந்த பள்ளிகளில், குலுக்கல் முறையில், மாணவர்கள் சேர்க்கைக்காக தேர்வு செய்யப்படுவர்.இதை அரசு அதிகாரிகள் கண்காணிப்பர்.


 தகுதியுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் அந்தந்தப் பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும்.

குலுக்கலுக்கு முன், தேவையான சான்றிதழ்கள், பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

முதலாவதாக, ஆதரவற்றவர்கள், எச்.ஐ.வி., யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவுத்தொழிலாளர் குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் போன்றோரின் தகுதியான விண்ணப்பங்கள், குலுக்கல் இன்றி சேர்க்கைக்குத் தேர்வு செய்யப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment