செல்போனை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால் தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தகவல்களை பறிமாறிக்கொள்வதற்காக இருவர் பேசிக்கொள்ளும் ஒரு கருவி தான் செல்போன். ஆனால் இந்த கட்டத்தை செல்போன் எப்போதே தாண்டிவிட்டது. ஷாப்பிங், பேங்கிங், கேம்ஸ், சோஷியல் மீடியா என பல பணிகள் கைக்குள் அடங்கிவிட்டன.
பலரின் தொழில் சார்ந்த முதலீடாகவே செல்போன் இருக்கிறது. அவர்கள் கையில் ஸ்மார்ட் போன் இல்லை என்றால் அவர்களுக்கு வேலை இல்லை என்ற நிலைமை கூட உருவாகிவிட்டது. இப்படி நாளுக்கு நாள் செல்போனின் தேவையை நாம் அதிகரித்துக்கொண்டே செல்கிறோம்.
இளைஞர்கள் சாலைகளில் குனிந்த தலை நிமிராமல் செல்போனை பயன்படுத்திக்கொண்டு போகிறார்கள். குடிபோதை விபத்து போல செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இப்படி நம் வாழ்வியலை மாற்றத்தொடங்கிய செல்போன் தற்போது நம் உடல் வடிவிலும் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கி இருப்பதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
செல்போனை அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்தி வருவதால் தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள விஞ்ஞானிகள், அதிக நேரம் குனிந்தபடியே பயன்படுத்துவதால் தலையின் முழு எடையும் மண்டை ஓட்டின் பின்புறம் செல்கிறது.
இதனால் தசை நாண்கள், தசை நார்கள் வளர்கின்றன.
இதன் காரணமாக தலையின் பின்புறம் உள்ள மண்டை ஓட்டுக்குள் கூர்மையான எலும்பு ஒன்று வளர்கிறது என்று தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment