ரெட் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 1, 2019

ரெட் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கையால் பொதுமக்கள் பீதி..!

இந்தியாவில் இதுவரை மழைக்கு மட்டுமே ரெட் அலர்ட் விடுத்து வந்த வானிலை மையம் தற்போது வெயிலுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களில் ஜூன் 5-ம் தேதி வரை கடுமையான வெயில் தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.


தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். குறிப்பாக டெல்லியில் மே 30-ம் தேதி 46.8 டிகிரி செல்சியசாக இருந்த வெப்பம், மே 31-ம் தேதி அன்று 44.8 டிகிரியாகவும் இருந்தது.


 அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் உள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் டெல்லியின் பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கல் அதிகமாக இருக்கும். பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசக்கூடும். வரும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் வெயிலின் தாக்கல் மேலும் அதிகரிக்கக்கூடும்.


 ஆகையால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


 ஆனால் ஜூன் 3-வது வாரம் வரை அல்லது அதற்கு முன்பு வட இந்தியாவில் பருவமழை துவங்க வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


 ஏற்கனவே மக்கள் கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில் ஜூன் 5-ம் தேதி ரெட் அலர்ட் விடுத்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment