வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை:கலெக்டர் அழைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 4, 2019

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை:கலெக்டர் அழைப்பு

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு, தகுதியானவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, சென்னை மாவட்ட கலெக்டர், சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழக அரசின் சார்பில், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.


இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு போன்ற கல்வி தகுதி உள்ளோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல், வேலை வாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற, சாந்தோம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்.


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை, சாந்தோமில் உள்ள, தொழில் திறனற்றோருக்கான, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, தொடர்பு கொள்ள வேண்டும்.


இந்த உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.


ஆதி திராவிடர், 40 வயதுக்கு உட்பட்டவராகவும், பழங்குடியினர், 45 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரர்கள், தனியார் அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

அதேபோல், மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஓர் ஆண்டு உயிரிப் பதிவேட்டில் உள்ளவர்கள், சாந்தோம் மாற்றுத்திறனாளிகளுக்கான, சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பித்தல் வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வித் தகுதி மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தை, சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பெற்று, விண்ணப்பிக்க வேண்டும்.


ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள், விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள், சுய உறுதிமொழி ஆவணத்தை வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் ஆகிய விபரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment