பொதுத் தேர்வுக்கு பழைய பாடம் கிடையாது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, June 22, 2019

பொதுத் தேர்வுக்கு பழைய பாடம் கிடையாது



பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இனி, பழைய பாடத்திட்டப்படி, பொதுத் தேர்வு நடத்தப்படாது' என, அரசுதேர்வுத் துறை அறிவித்துள்ளது.

அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளி கல்வித் துறையில், 2018 - 19ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம் அறிமுகமாகி உள்ளது. தற்போது, 2019 -20ம் கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, புதிய பாடத்திட்டம் அமலாகி உள்ளது. எனவே , 10ம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, அடுத்த ஆண்டு மார்ச்சில் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள், புதிய பாடத்திட்டத்தின் படியே நடத்தப்படும்; பழைய பாடத்திட்டம்கிடையாது. இந்த வகுப்புகளில், பழைய பாடத்திட்டத்தில், ஏற்கனவே தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள் , அந்த பாடங்களுக்கு, புதிய பாடத்திட்டத்தின் படியே தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment