தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான மாநில அளவிலான யோகாசனப் போட்டி கடந்த மே 15-ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழக அணி சார்பில் 16 மாணவர்கள் தேர்வாகினர். அதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்ஷினி, யுவஸ்ரீ, யுவலட்சுமி, காயத்ரி, அட்சயா, முகமது சையத், ஹரீஷ், முகமது ஜமால் ஆகிய 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ஜூன் 17-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை புதுதில்லியில் தேசிய யோகா ஒலிம்பியாட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், 16 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் பங்கேற்ற 8 மாணவர்கள் வியாழக்கிழமை தங்கப்பதக்கம் வென்றனர்.
இதில், 3 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். அட்சயா (9-ஆம் வகுப்பு, சின்னகாஞ்சிபுரம், பிஎம்எஸ் மேல்நிலைப்பள்ளி), ஆர்.காயத்ரி (9-ஆம் வகுப்பு, பெரிய காஞ்சிபுரம், ஆற்காடு நாராயணசாமி மேல்நிலைப்பள்ளி), ஜி.முகமது ஜமால் (9-ஆம் வகுப்பு, ஆந்திரசன் மேல்நிலைப்பள்ளி) ஆகிய மூவரும் தங்கம் வென்றமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, யோகா பயிற்றுநர் டி.யுவராஜ் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்

No comments:
Post a Comment