தமிழக அரசு பாடநூலில் தேசிய கீதத்தில் பிழை: கல்வியாளர்கள் அதிர்ச்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 18, 2019

தமிழக அரசு பாடநூலில் தேசிய கீதத்தில் பிழை: கல்வியாளர்கள் அதிர்ச்சி

தமிழக அரசு வழங்கிய பாட நூலில் தேசிய கீதத்தில் பிழை இருப்பதை கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வி துறை சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அச்சிடப்படுவதற்கு முன்னர் பல கட்டங்களாக பிழை திருத்தும் பணியில் பலர் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் புத்தகம் அச்சிடும் பணி நடந்துள்ளது.


 இந்நிலையில், தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பாக 2ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கணக்கு சூழ்நிலையியல் பாடநூலில் தொகுதி 2ல் உள்ள தேசிய கீதத்தில் பிழை இருப்பதை கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் தேசிய கீதத்தின் இறுதியில் ‘ஜன கண மங்கள தாயக ஜயஹே’ என்பதற்கு பதிலாக ‘ஜன கண மன அதி நாயக ஜயஹே’ என தவறுதலுடன் அச்சாகி உள்ளது.


எனவே, இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பிழையாக உள்ள தேசிய கீதத்தை மாற்றி பிழையற்ற தேசிய கீதத்தை அச்சிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment