🕴🕴🕴🕴🕴🕴🕴👩💻👩💻👩💻👩💻👩💻👩💻👩💻
*காலை வழிபாடு மற்றும் தினசரி செயல்பாடுகள்*
2⃣6⃣-0⃣6⃣-1⃣9⃣
*இன்றைய திருக்குறள்*
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
மு.வ உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
*கருணாநிதி உரை:*
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.
*சாலமன் பாப்பையா உரை:*
இடைவிடாமல் இயன்ற மட்டும் எல்லா இடங்களிலும் அறச்செயலைச் செய்ய வேண்டும்.
✡✡✡✡✡✡✡
*பொன்மொழி*
மனிதன் சிரிப்பது மற்றவர்களைப்பார்த்து ஆனால் அவன் அழுவது தன்னைப்பார்த்து.
The man who smiles about others, He cries about him.
⚜⚜⚜⚜⚜⚜⚜
*Important Daily Used Words*
Hiccup விக்கல்
Cholera காலரா
Acne பரு
Hepatitis கல்லீரல் அழற்சி
Measles தட்டம்மை
🎋☘🍀🌿🌿🍀☘
*இன்றைய மூலிகை*
*கற்பூர வல்லி (ஓமவல்லி)*
மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.
✍✍✍✍✍✍✍
*பொது அறிவு*
1.இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
*உத்திரபிரதேசம்*
2. புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ?
*அமினோ அமிலத்தால்*
3. பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ?
*லூயி பாஸ்டர்*
4. ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ?
*குந்தவ நாடு*
5. உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?
*குல்லீனியன்*
6. மயில்களின் சரணாலயம் எது ?
*விராலிமலை*
✒✒✒✒✒✒✒
*நூலாசிரியர் -நூல்கள்*
தேசபக்தன், நவசக்தி – திரு.வி.க
குயில் – பாரதிதாசன்
சுதேசிமித்தரன் – ஜி. சுப்ரமணிய ஐயர்
பாலபாரதி – வ.வே.சு. ஐயர்.
ஞானபோதினி – சுப்ரமணிய சிவா.
இந்தியா, விஜயா – சுப்ரமணிய பாரதி.
🧬🧬🧬🧬🧬🧬🧬
*Today's grammar*
*Demonstrative Pronouns – குறிப்பிடுச் சுட்டுப்பெயர்கள்*
ஒன்றை அல்லது பலவற்றை குறித்துக்காட்டுவதற்கு அல்லது அடையாளப்படுத்தி பேசுவதற்கு இச்சுட்டுப் பெயர்கள் பயன்படுகின்றன.
This – இது, இந்த (ஒருமை)
That – அது, அந்த (ஒருமை)
These – இவை, இவைகள் (பன்மை)
Those – அவை, அவைகள் (பன்மை)
உதாரணம்:
This book is new but those books are old.
இந்த புத்தகம் புதியது ஆனால் அப்புத்தகங்கள் பழையது.
(இவற்றில் book books எனும் பெயர் சொற்களை தவிர்த்து சுட்டுப்பெயர்களை மட்டுமே பயன்படுத்தியும் பேசலாம்.)
This is new but those are old.
இது புதியது ஆனால் அவைகள் பழையது.
📫📫📫📫📫📫📫
*அறிவோம் இலக்கணம்*
*மாத்திரை*
எழுத்துகள் ஒலிக்கப்படும் , கால அளவு மாத்திரை எனப்படும் . இயல்பாக நாம் கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்க ஆகும் நேரமே ஒரு மாத்திரை எனப்படும்
.எழுத்தின் சாரியை ஒலிக்கும்போது ஓசை இனிமைக்காகவும் எளிமைக்காகவும் சாரியை சேர்ந்து ஒலிக்கப்படும்.
கரம், காரம், கான், அகரம் என்பன எழுத்தின் சாரியைகள் ஆகும்.
🗣🗣🗣🗣🗣🗣🗣
*இன்றைய கதை*
*முரசு சத்தம்*
ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது.
பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது.
*நீதி*
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
🧾🧾🧾🧾🧾🧾🧾
*செய்திச் சுருக்கம்*
🔮 இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் யார் என்பது ஜூலை 23ம் தேதி தெரியும் என அறிவிப்பு
🔮 இந்திய கடலோர காவல் படை இயக்குநராக முதன்முதலாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
🔮 தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு மாணவர் கலந்தாய்வு தொடங்கியது.
🔮 காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு.
🔮 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்துள்ளது சதம் விளாசினார் பின்ச்.
☘🎋🌿🍀☘🎋🌿
*தொகுப்பு*
T.THENNARASU,
S.G.TEACHER,
TN DIGITAL TEAM
R.K.PET BLOCK
THIRUVALLUR DT

No comments:
Post a Comment