தமிழகத்தில் ஒன்றரை வயது குழந்தைக்கு உலக சாதனையாளர் விருது - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, June 30, 2019

தமிழகத்தில் ஒன்றரை வயது குழந்தைக்கு உலக சாதனையாளர் விருது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒன்றரை வயது குழந்தை 1 நிமிடத்தில் 30 நாடுகளில் பெயரைக் கூறி உலக சாதனை படைத்துள்ளது.

உத்தமபாளையத்தை சேர்ந்த வருசை பீர் முகமது-நபிலா பேகம் தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது நதீன்.


இக்குழந்தை, தேசியக் கொடிகளைப் பார்த்து ஒரு நிமிடத்தில் 30 நாடுகளின் பெயர்களைக் கூறி உலக சாதனை படைத்துள்ளது.

குழந்தைகளின் சாதனைகளை கௌரவப்படுத்தி பாராட்டு சாதனை சான்றிதழ் வழங்கி வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த வில் மெடல்ஸ் ஆப் வேல்டு ரெக்கார்ட் அட்டம்ட் என்ற தொண்டு நிறுவனம் இந்த குழந்தையின் சாதனையை பதிவு செய்துள்ளது.


 இதற்கு முன்பு இதே சாதனையை இரண்டரை வயது குழந்தை செய்ததே உலக சாதனையாக இருந்துள்ளது.

உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலாளருமான ஏ.தமிழ்ச்செல்வி அக்குழந்தைக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

No comments:

Post a Comment