தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: டிஆர்பி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

தமிழக அரசுப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை: டிஆர்பி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 2144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம்(டிஆர்பி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Post Graduate Assistants / Physical Education Directors Grade-I

காலியிடங்கள்: 2144

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Tamil - 319
2. English - 223
3. Mathematics - 279
4. Physics - 210
5. Chemistry - 356
6. Botany - 154
7. Zoology - 144
8. History - 104
9. Geography - 11
10. Economics - 211
11. Commerce - 99
12. Political Science - 14
13. Physical Education - 16
14. Bio Chemistry - 01
15. Micro Biology - 01
16. Home Science - 01
17. Indian Culture - 01

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்று பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்பிடிப்பில் ஒரே பாடத்தை படித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

 ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பக் கட்டணம்:

ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

 தகுதியானவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/PG_2019/pg_2019.pdf?fbclid=IwAR0bQ5zTmMGq12j1mt1NDdTV0_GzgbmF7XNg6tomZ3ovelEavss3lbuG5DM என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்பிக்கும் தேதி: 24.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2019

No comments:

Post a Comment