தலைகீழாக தொங்கியபடி அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை இணைத்து சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, June 25, 2019

தலைகீழாக தொங்கியபடி அதிவேகமாக ரூபிக் கனசதுரத்தை இணைத்து சாதனை

ஜார்ஜியா நாட்டில், இளைஞர் ஒருவர் தலைகீழாக தொங்கியபடி ரூபிக் கனசதுரத்தில் அனைத்து பக்கங்களையும் அதிவேகமாக இணைத்து சாதனை படைத்துள்ளார்.

19 வயதான வாகோ மார்சிலஸ்விலி, கம்பி ஒன்றில் தலைகீழாக தொங்கியவாறு வெறும் பதிமூன்றே வினாடிகளில், அனைத்து வண்ணங்களையும் இணைத்து சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் 15.84 வினாடிகளில் இந்த புதிர் சதுரத்திற்கு தீர்வு கண்ட சீனாவை சேர்ந்த க்யூ ஜியான்யூவின் (Que Jianyu,) சாதனையை வாகோ முறியடித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நீருக்கடியில் ஒரே மூச்சில் 6 புதிர் சதுரங்களில் வண்ணங்களை ஒன்று சேர்த்து வாகோ சாதனை படைத்திருந்தார். அந்த சாதனைக்கு 44.25 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment