வங்கி கணக்கு தொடங்க, சிம் கார்டு பெற ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்த மசோதாவில், நாட்டு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆதாரை கட்டாயமாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதுவரை 60 கோடி பேர் ஆதார் எண்ணை கொடுத்து சிம்கார்டு பெற்றுள்ளனர் என்ற அவர், இதே போல வங்கி கணக்குகளை தொடங்கவும், இனி மேல் சிம்கார்டுகளை பெறவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க இந்த மசோதா வகை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் மசோதா இருப்பதாக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆதார் எண்ணை அரசு நலத்திட்டங்களுக்கு கட்டாயமாக்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்த உச்சநீதிமன்றம், அரசு நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் என்றும், வங்கி கணக்கு, சிம் கார்டு பெற கட்டாயம் இல்லை என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து வங்கி கணக்கு, சிம்கார்டுக்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால் இந்த அவசர சட்டம் காலாவதி ஆன நிலையில் இப்போது மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment