புதிய வருமான வரி விதிமுறைகள் இன்று முதல் அமல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, June 17, 2019

புதிய வருமான வரி விதிமுறைகள் இன்று முதல் அமல்

வருமான வரி செலுத்தத் தவறியோர், இனி  அபராதம் மட்டுமே செலுத்தி விட்டு தப்ப முடியாத வகையில் வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியமானது வெள்ளிக்கிழமை இரவில் திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வங்கிக் கணக்கு வைத்திருப்போரும், சொத்து வைத்திருப்போரும் அதிகாரிகளிடம் சிக்கும் போது, வரியும் அபராதமும் செலுத்தி விட்டு தப்பிக்க முடியாது. கருப்புப் பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் இனி சமரசத்திற்கு இடமில்லை.

புதிய விதிகளின் கீழ் இது கடும் குற்றமாக கருதப்படும். ஆதாயத்தில் இருந்து கழிக்கப்படும் வரி மற்றும் ஆதாயத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரியை செலுத்த தவறுதல் ஆகியவை சமரசத்திற்கு உகந்தது. இந்த புதிய விதிமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

No comments:

Post a Comment