சிவகிரியில் ஆணிப்படுக்கையில் 50 வகையான யோகாசனங்களை செய்து அசத்திய மாணவனை தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் பாராட்டினார்
பள்ளி மாணவன் மருதுபாண்டியன் (12), 6 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட ஆணிப்படுக்கையில் 50 வகையான யோகாசனங்கள் செய்து உலக சாதனை நிகழ்த்தினார்.
இதில் கலந்து கொண்ட தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன், உலக சாதனை நிகழ்த்திய மருதுபாண்டியன் மற்றும் யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்துள்ள அருண்பாண்டி, ஹரீஸ் தீபக், அஜய் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியதாவது: யோகாவும், இந்திய மருத்துவமும் பின்னிப்பிணைந்தவை.
உடல், மனம், ஆத்மா மூன்றையும் ஒருமுகப்படுத்துவது யோகா. எந்த ஒரு மதத்திற்கோ, சமுதாயத்திற்கோ, தனிநபர்களுக்கோ யோகா சொந்தமானதல்ல. ஒட்டுமொத்த உலக மக்களுக்கான கலை யோகா.
எனவே அறிவியலோடு தொடர்புடைய இந்த கலையை அவரவர் உடலுக்கேற்ற வகையில் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலோடு தினமும் செய்து ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் பிரணா யோகா பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், பரதநாட்டியம் நடந்தது.

No comments:
Post a Comment