சென்னையில் மட்டும் இவ்வளவு பேருக்கு லைசென்ஸ் ரத்தா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, June 6, 2019

சென்னையில் மட்டும் இவ்வளவு பேருக்கு லைசென்ஸ் ரத்தா?

சென்னையில் 2018-ஆம் ஆண்டு முதல் இந்தாண்டு மே மாதம் வரை 2 லட்சத்து 7 ஆயிரத்து 904 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டிருப்பதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2018-ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 475 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், இந்தாண்டு மே மாதம் வரை 55ஆயிரத்து 429 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும், தற்காலிகமாக ரத்தும் செய்யும்படி போக்குவரத்து துறைக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர்.


 தங்கள்பரிந்துரையை ஏற்று ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிப்பதாக போக்குரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் விதிகளை மீறியதற்காக 2018 ஆம் ஆண்டு 24 லட்சத்து 47 ஆயிரத்து 329 வழக்குகள் பதியப்பட்டு, அதன் மூலம் அபராதமாக 27 கோடியே 20 லட்சத்து 88ஆயிரத்து 430 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது

2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 563 வழக்குகள்பதியப்பட்டு, அதன் மூலம் 8 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரத்து 350 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment